ப்ரோமோஷனில் உருக்கமாக பேசிய சீயான் விக்ரம்..!!
சீயான் விக்ரம் நடிப்பில் ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படமே தங்கலான் . விறுவிறுப்பாக உருவான இப்படம் வரும் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி , மாளவிகா , பசுபதி , உள்ளிட்ட ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தங்கலான் படக்குழு தற்போது ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கும் நிலையில் படக்குழு இன்று மதுரைக்கு சென்றுள்ளது அங்கு உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்ற விழாவில் .
விக்ரம் , பார்வதி , மாளவிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர் .
இந்த ப்ரோமோஷன் விழாவில் பேசிய விக்ரம் கூறியதாவது :
தங்கலான் போன்ற ஒரு அருமையான படத்தினை எனக்கு கொடுத்த இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு மிகவும் நன்றி எனவும், படப்பிடிப்பு நாட்களில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டு இருப்போம்.
தங்கலான் போன்ற படத்தினை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தில் இருக்கணும். அந்த தில் இருந்ததால் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படத்தை சிறப்பாக தயாரித்துள்ளார் என விக்ரம் பேசியுள்ளார்.