பாரதி கண்ணம்மாவுக்கு விரைவில் மூடுவிழா..? நடிகை சொன்ன பதில் இதுதான்..!

 
நடிகை பரீனா

பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை பரீனா இன்ஸ்டாவில் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். அது பலரையும் கவர்ந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நிறைய பார்வையாளர்கள் உள்ளனர். மேலும் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் அதிகம்பேரால் பார்க்கப்படும் சீரியலாகவும் இது உள்ளது.

தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகப்பெரிய ஹிட்டடித்த இந்த சீரியல் விரைவில் முடியப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கேற்றவாறு சீரியலில் கதையின் போக்கும் நிறைவு கட்டத்தை எட்டி வருவதாகவே தெரிகிறது.

ஆனால் அதையும் சீக்கரமாக முடிப்பதாக தெரியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சீரியல் ரசிகர்கள், பாரதி கண்ணம்மாவுக்கு சுபம் போடுவது எப்போது என்கிற கேள்வியை சமூகவலைதளத்தில் முன்வைக்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடியும் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பரீனா “2051”ம் ஆண்டு என்று சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். இது நெட்டிசன்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே சமயத்தில் சீரியல் பார்வையாளர்கள் பலர் விரைந்து பாரதி கண்ணம்மா சீரியலை முடிக்கவும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web