உலகளவில் இத்தனை கோடி வசூலா..!! ஆச்சரியத்தில் பாலிவுட் திரையுலகம்..!!

 
1

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படம் கடந்த மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

1

இந்தப் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்தது.


இந்த நிலையில் பதான் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் உலக அளவில் ரூ. 901 கோடி வசூலித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் கூறுகையில், உலக அளவில் பதான் திரைப்படம் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.558.40 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 342.60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் பதான் திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது எனக் கூறியுள்ளது.

From Around the web