பா. ரஞ்சித் படத்திலிருந்து விலகிய ‘அட்டக்கத்தி’ தினேஷ்..!

 
நடிகர் தினேஷ்

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அட்டக்கத்தி தினேஷ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் அமேசான் ஓடிடி தளத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தை பா. ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற பெயரில் முழுக்க முழுக்க காதல் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடித்து வந்தார்.

இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த கதாபாத்திரத்தில் மெட்ராஸ் புகழ் நடிகர் கலையரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

From Around the web