காமெடி நடிகர் அர்ஜூனனுக்கு 3-வது குழந்தை..!
பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் அவர் பிரபலமானார் அர்ஜூனன்.இதையடுத்து, வாயை மூடி பேசவும், கப்பல், அவியல், டார்லிங் 2, இது நம்ம ஆளு ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். ஜெயம்ரவி நடித்த டிக்டிக்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். அவருக்கு காயத்ரி என்பவருடன் திருமணமாகி இரட்டை குழந்தைகள் உள்ளனர். அதில் பெண் குழந்தைக்கு இயல் என்றும், ஆண் குழந்தைக்கு இளன் என்றும் பெயரிட்டுள்ளனர்.
கவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டாடா படத்தில் அவருக்கு மகனாக இளன் நடித்திருப்பார். இப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இதையடுத்து, விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தில் விஜய் – த்ரிஷாவுக்கு மகளாக இயல் நடித்திருப்பார். படம் முழுவதும் பயணிக்கும் இயலின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. அண்மையில் நடந்த லியோ வெற்றஇ விழாவில் கூட விஜய்யை மிகவும் மிஸ் செய்வதாக மேடையில் கூறி கண்ணீர் விட்டது அனைவரையும் நெகிழ வைத்தது.
இந்நிலையில், நடிகர் அர்ஜூனனின் மனைவி காயத்ரிக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. இயன், இயலுக்கு தம்பி பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு அர்ஜூனன் அறிவித்துள்ளார். மேலும், 3-வது குழந்தைக்கு இமையன் என பெயரிட்டுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.