நகைச்சுவை நடிகர் பால சரவணன் வீட்டில் கொரோனாவால் நடந்த சோகம்..!

 
நடிகர் பாலசரவணைனின் தந்தை

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருக்கும் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் பால்சரணவனன். அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்.

கொரோனா இரண்டாவது அலையில் போது பாலசரவணனைன் உடன்பிறந்த தங்கையின் 32 வயதேயான கணவர் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்தார். இந்த மரனம் அவர்களுடைய குடும்பத்தை நிலைகுலையவைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் அனைவரும் மீண்டு வந்த நிலையில், பாலசரவணைன் தந்தை ரெங்கநாதன் (60) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று அவர் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரெங்கநாதன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அவருக்கு உரிய சிகிச்சை அளிகக்ப்பட்டும், ரெங்கநாதனை காப்பாற்ற முடியவில்லை.

குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு நபர்கள் மரணமடைந்த தான் பாலசரவணன்னும் அவரை சேர்ந்தோரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அவருடைய இழைப்பு கோலிவுட் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 

From Around the web