இசைவெளியீட்டு விழாவிற்கு பெண் வேடத்தில் வந்த காமெடி நடிகர் கூல் சுரேஷ்..!

 
1

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் பங்கு பற்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கூல் சுரேஷ் 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கூல் சுரேஷுக்கு  அவரது நண்பர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தார்கள். அவரது நண்பரும் நடிகருமான சந்தானமும் அவருக்கு மாலை போட்டு தனது நட்பை வெளிப்படுத்தி  இருந்தார்.

இதை தொடர்ந்து தனது நண்பரும் நடிகருமான சிம்புவுக்கும், சந்தானம் நடிப்பில் வெளியான படங்களுக்கும் வித்தியாசமான முறையில் படம் பார்க்க சென்று இருந்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாம் பங்களிப்போம் இல்லை என்றால் புதிதாக கட்சி ஒன்றை அறிவிப்போம் என அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது கன்னி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பெண் வேடம் அணிந்து சென்றுள்ளார் கூல் சுரேஷ். தற்போது அவர் பெண் வேடத்தில் விழாவுக்கு வந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

From Around the web