நடிகர் அஜித்துக்கு பாராட்டு விழா நடக்க வேண்டும் - காமெடி நடிகர் கோரிக்கை..!
Feb 3, 2025, 06:35 IST

சினிமாவிலும் அதிக ரசிகர் பட்டாளத்தினை கொண்டுள்ள நடிகராக இருக்கின்றார் நடிகர் அஜித்.
இந்த வருடம் இவர் நடிப்பில் "விடாமுயற்சி ","குட் பேட் அக்லி " என இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.இவரது துணை நடிகரும் நகைச்சுவை நடிகருமாகிய யோகி பாபு அஜித் குறித்து பேசியுள்ளார்.
ஊடகவியலாளரின் அஜித்தின் பத்மபூஷன் விருது குறித்த கேள்விக்கு நடிகர் யோகி பாபு "அவர் எவ்வளவு பெரிய சாதனை படைச்சிருக்கார் எவ்வளவு பெரிய விஷயம் அது அவரை எல்லாரும் பாராட்டனும் ;அவருக்கு எல்லாரும் சேர்ந்து பாராட்டு விழா நடத்தணும் " என கூறியுள்ளார்.