நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம்..!!
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. 1984- ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன மயில்சாமி. தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் மெக்கானிக் கமலின் நண்பராக ஒருவராக நடித்து வெளிச்சம் பெற்றார். சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
அவருடைய மறைவு திரைப்படத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் மயில் சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல், இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வடபழனி ஏ.வி.எம் சுடுகாட்டில் இறுதிச்சடங்கிற்கு பின்பு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் மயில்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.