காமெடி நடிகர் செந்திலுக்கு கொரோனா உறுதி- குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

 
காமெடி நடிகர் செந்திலுக்கு கொரோனா உறுதி- குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழ் சினிமாவின் மூத்த காமெடி நடிகர்களில் ஒருவரான செந்திலுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடும்பத்தாருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனுடைய தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலை மிகவும் வீரியமாக உள்ளது.

பொதுமக்கள், பிரபலமானவர்கள் என பலரும் இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நடிகர் செந்தில், அவருடைய மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் செந்தில் தனது குடும்பத்தாருடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற வேண்டிய அவருடைய ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் செந்திலின் மகன் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web