காமெடியன் டூ ஹீரோ... பாலா சரவணனின் அடுத்த அவதாரம்..!
கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் பாலா சரவணன். அதற்குப் பின்பு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டி புலி திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார்.
அதற்கு பின்பு டார்லிங், பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
அதிலும் குறிப்பாக திருடன் போலீஸ் மற்றும் டார்லிங் படத்தில் இவரது காமெடி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், தற்போது நடிகர் பாலா சரவணன் நடிக்கும் புதிய படமான "பேச்சி" படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த படம் ஹாரர் படமாக இருப்பதோடு இந்த படத்தில் ஹீரோவாக என்ட்ரி ஆகி உள்ளார் பாலா சரவணன். தற்போது இந்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
Happy to release the first-look poster of the folklore horror film #பேச்சி.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 15, 2024
Best wishes to my dear brother @Bala_actor and the entire team for a huge success 😊👍@SGayathrie @devRamnath @rockraamz @RajeshMRadio @Veyilonent @Verusproduction @filmmaker2015 @ignatiousaswin… pic.twitter.com/M0Va7BZtwa