ஜார்ஜியா செல்லும் தளபதி 65 படக்குழு..?

 
ஜார்ஜியா செல்லும் தளபதி 65 படக்குழு..?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 65’ படத்திற்கான ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்திற்கு பத்து நாட்கள் ஷூட்டிங் செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் 65 வது படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. கோலமாவு கோகிலா பட புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

இதுதவிர, இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிக்பாஸ் புகழ் கவின் இந்த படத்தில் துணை இயக்குநராக பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது. மேலும் மனோஜ் பரஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

காதல், நகைச்சுவை, அதிரடி என பக்க கமர்ஷியல் படமாக தளபதி 65 தயாராகிறது. கடந்த வாரம் சென்னை பெருங்குடியில் நடைபெற்ற விழாவில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. அதில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என கூறப்பட்டது. அதன்படி, தற்போது தளபதி 65 படத்திற்கான முதற்கட்ட பணிகள் வேகம் எடுத்துள்ளன. அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. 

அங்கு மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது. அதை அடுத்து சென்னை திரும்பும் படக்குழு மே மாதம் முதல் தளபதி 65 படத்திற்கான ஷூட்டிங்கை நடத்தவுள்ளனர்.
 

From Around the web