ஏழைகளின் பசிதீர்க்க தளபதியின் நடமாடும் விலையில்லா உணவகம்..!!

 
1

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக அதி கனமழை பெய்து  வருகிறது. விடாது பெய்து மழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தற்போது மழை குறைந்துள்ளதால் மழை நீரை அகற்றம் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கும்மிடிப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு, பசி பட்டினியோடு மக்கள் இருந்து வந்ததை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். 

விஜய்யின் மக்கள் இயக்கத்தினரின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. 

இதற்கு முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் தஞ்சாவூரில் ‘விஜய் விலையில்லா உணவகம்’ ஆரம்பித்து ஏழைகளுக்கு மூன்றுவேளை உணவையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 


 


 

From Around the web