ஆணுறை பரிசோதனையாளரான கார்த்தி பட நடிகை ..!!

 
1

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்த இவர், தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய வகை ஆணுறையை அறிமுகப்படுத்தும் வகையில் இளம் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் அந்த புதிய ஆணுறையின் செயல் திறனை சோதித்து சொல்ல வேண்டும்.

1

இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ரகுல் ப்ரீத் சிங்கிடம் கூற, அவரும் உடனே இதற்கு சம்மதம் தெரிவித்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் தயாராகவுள்ளது.

வேலையில்லாத வேதியியல் பட்டதாரியான ரகுல் ஒரு சிறு நகரத்தில் வேலைக்காக ஆசைப்பட்டு, ஆணுறை சோதனை செய்யும் வேலையில் சேர்கிறார். அதைத் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமிருந்தும் ரகசியமாக வைத்திருப்பது தான் படத்தின் கதை. 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘சத்ரிவாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

1


 

From Around the web