விரைவில் ஓடிடியில் வெளியாகும் 'மாநாடு'..!! ரசிகர்கள் அதிர்ச்சி 

 

 
1

நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.சமீபத்தில் டைம் லூப் கதைக்களத்தில் வந்த படங்களில் மாநாடு சிறப்பாக மாறியுள்ளது. 

அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய இப்படம் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக  அமைந்தது என்றே சொல்லலாம்.மொத்தத்தில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இருவரும் சிறந்த கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மனதை வென்றுள்ளனர்.

சூப்பர் ஹிட்டடித்துள்ள இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலித்து வருகிறது. அப்படிப்பட்ட சூப்பர் ஹிட்டடித்துள்ள படம் விரைவில் ஒடிடியில் வெளியாக இருப்பது சிம்பு ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சோனி லைவ் ஒடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வரும்  டிசம்பர் 24-ஆம் சோனி லைவ் ஓடிடித்தளத்தில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.  

From Around the web