உறுதி செய்யப்பட்ட ‘நரகாசூரன்’ பட வெளியீடு..!

 
நரகாசூரன் பட போஸ்டர்

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் சுமூகமாக முடிக்கப்பட்டதால் ‘நரகாசூரன்’ படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

’துருவங்கள் பதினாறு; படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படன் ‘நரகாசூரன்’. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்

முன்னதாக இந்த படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்தனர். பிறகு ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக கவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படத்தின் படமாக்க பணிகள் அனைத்தும் முடிந்த  பின்னும், ரிலீஸ் செய்வதில் பல ஆண்டுகளாக சிக்கல் இருந்து வந்தது.

பலமுறை இந்த படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு, பிறகு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாக ‘நரகாசூரன்’ படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நரகாசூரன் படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படுகிறது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.


 

From Around the web