குவியும் வாழ்த்துகள்!! 11 ஆண்டுகால காதலனை கரம் பிடித்த பாலிவுட் நடிகை..!!

 
1

கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சக் தே இந்தியா’ படத்தில் நடத்து பிரபலமடைந்தவர் சித்ராஷி ராவத். அதன்பிறகு லக், பிளார் ஹோம், தேரே நள் லவ் ஹோ கயா, பிரேம் மாயீ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தேசிய அளவிலான தடகள வீராங்கனையாக இருந்து நடிகையாக பெயர் பெற்றவர். இவர் 2010-ம் ஆண்டு முதல் துருவாதித்யா பகவானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

1

அதன்படி, பிப்ரவரி 4-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 3 நாள்களாக திருமண விழா நடந்தது. அந்த வகையில் மெஹந்தி, ஹல்தி, மோதிரம் மாத்தும் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4-ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு புதுமண ஜோடிகள் சிறிய அளவிலான தேரில் வலம் வந்தனர். அந்த நேரத்தில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தனது திருமணம் குறித்து சித்ராஷி ராவத் தனது சமூக வலைதள பக்கங்களில், “திருமணத்திற்குப் பிறகும் நாங்கள் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம். இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் மருமகளாகிவிட்டேன். சத்தீஸ்கதியா சேபிள் பதியா” எனப் பதிவிட்டுள்ளார். இந்த திருமணத்தின்பின்பு நடந்த வரவேற்பு விழாவில் பாலிவுட் நடிகைகள் தன்யா அப்ரோல், சுபி மேத்தா, ஷில்பா சுக்லா, ஸ்ருதி பன்வார், சீமா ஆஸ்மி, டெல்னாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

From Around the web