குவியும் வாழ்த்துக்கள்.. ஆண் குழந்தைக்கு அம்மாவான நடிகை இலியானா!  

 
1

தெலுங்கில் வெளியான தேவதாஸு, போக்கிரி படங்களில் அறிமுகமான நடிகை இலியானா, அதே ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார். மேலும், 2 தெலுங்கு படங்கள் என அறிமுகமான ஆண்டிலேயே 5 படங்களை ரிலீஸ் செய்து அமர்க்களப்படுத்திய இலியானா டோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக மாறினார்.

36 வயதாகும் நடிகை இலியானா வெளிநாட்டினருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தனது மகன் பிறந்தார் என்றும் அந்த குழந்தைக்கு கோவா பீனிக்ஸ் டோலன் (Koa Phoenix Dolan) எனப் பெயரிட்டுள்ளார்.

அதன் அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை இலியானாவின் அழகிய ஆண் குழந்தையின் முகத்தை பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் இலியானாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

From Around the web