பிகில் படத்தில் அனிதாவிற்கு திடீர் திருமணம் - குவியும் வாழ்த்துக்கள் ..!!

 
1

தமிழ் திரையுலகில் ஜெய்யுடன் இணைந்து ஜருகண்டி படத்தில் நடித்தவர் ரெபா மோனிகா. ’பிகில்’ படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான விளையாட்டு வீராங்கனையாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே  மேலும் பிரபலமானார். இது தவிர பல  மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

 ரெபோவும்  ஜோமோனும் சில வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சமீபத்தில் துபாய் சென்றபோது விழாவில் தனது காதலை வெளிப்படுத்தி, நடிகையை ஆச்சரியப்படுத்தினார். ரெபாவும் அந்த புரோபோசலுக்கு உடனே ஓகே சொல்லி விட்டார்.

1

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) காலை ஒரு தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது , மேலும் திருமணத்தின் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

From Around the web