பிக்பாஸ் ஆரவ் வீட்டில் நடந்த விசேஷம்- குவியும் வாழ்த்துகள்..!
Sep 25, 2021, 12:10 IST
பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் மனைவிக்கு கோலாகலமாக வளைப்பூட்டல் நிகழ்ச்சி முடிந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படம் சினிமாவுக்கு வந்தவர் ஆரவ். அதை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஓவியாவுடன் நெருக்கம் காட்டி சர்ச்சையில் சிக்கினார்.
எனினும் நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்து டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ராஹேன் என்கிற பெண்ணுடன் ஆரவ்வுக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் இந்தாண்டு செப்டம்பரில் ராஹேனுக்கு வளைப்பூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து நடிகர் ஆரவ்வுக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
 - cini express.jpg)