குவியும் வாழ்த்துக்கள் : ’கனா காணும் காலங்கள்' தீபிகாவுக்கு கல்யாணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

 
1

‘கனா காணும் காலங்கள்’ தொடரின் முதல் பாகத்தில் ஹரிதா என்ற கேரக்டரில் தீபிகா நடித்திருந்தார் . இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான  ’உங்களில் யார் பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டம் வென்ற மனோஜ் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மனோஜ் - தீபிகா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இந்த காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த திருமணம் கோவையில் நடந்துள்ளதாகவும் இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டதாக  கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி சீசன் 5' நிகழ்ச்சியில் மனோஜ் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்ற நிலையில்  'ஜோடி ஆர் யூ ரெடி' சீசனில் போட்டியாளராக தீபிகா கலந்து கொண்டார். நடனத்தின் மீதுள்ள காதலே இருவரையும் ஒன்றிணைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web