தந்தையானார் இயக்குநர் அட்லீ - குவியும் வாழ்த்துக்கள்..!!

 
1

'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநர் அறிமுகமான இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பிரம்மாண்டங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபலமானார். இதன் காரணமாக ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். 

இயக்குநர் அட்லி கடந்த 2014-ம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தங்களது மகிழ்ச்சிகரமான தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர அவை ரசிகர்களை மனதைக் கவர்ந்துவருகின்றன. இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி செய்தியை அறிவித்திருக்கிறார். அவரது பதிவில், ''நான் கர்ப்பமாக இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. உங்கள் அன்பும் வாழ்த்தும் எங்களுக்கு தேவை. இப்படிக்கு அன்புடன் அட்லி மற்றும் பிரியா என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் அட்லீ- நடிகை பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனத ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரியாஅட்லீ, ``இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை. அது போலவே எங்கள் ஆண் குழந்தை இங்கே உள்ளது. பெற்றோரின் புதிய அற்புதமான பயணம் இன்று தொடங்குகிறது! நன்றி. சந்தோஷம். ஆசிர்வாதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


 

From Around the web