மணல் சிற்பம் வடிவமைத்து ஜோதிகாவுக்கு வாழ்த்து..!

 
உடன்பிறப்பே

ஜோதிகா நடித்துள்ள அவருடைய 50-வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து மணல் சிற்ப வடிவில் அவருக்கு வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான ’வாலி’ படம் மூலம் அறிமுகமானவர் ஜோதிகா. அதை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, சிநேகிதியே போன்ற தமிழ் சினிமாவில் மெகா ஹிட்டடித்த படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருடைய படங்களில் நடித்து நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், சினிமாவுக்கு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.

பிறகு ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த அவர், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வரிசையில அவர் நடித்துள்ள படம் தான் ‘உடன்பிறப்பே’. இது ஜோதிகாவின் 50-வது படமாகும். 

அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. அதை முன்னிட்டு, மெரீனா கடற்கரையில் ஜோதிகாவின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு, ஜோதிகாவின் புகைப்படத்துடன் ‘உடன்பிறப்பே’ படத்தின் வெளியிட்டு தகவல் இடம்பெற்றுள்ளது. அதோடு வாழ்த்துக்கள் ‘ஜோதிகா 50’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

From Around the web