மீண்டும் ஒரு  சாதனை படைத்த சூரரைப் போற்று..!
 

 
மீண்டும் ஒரு சாதனை படைத்த சூரரைப் போற்று..!

கடந்த தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விமான போக்குவரத்து துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

அந்தாண்டின் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டு, ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படங்களின் பட்டியலில் மொத்த இருந்த 366 படங்களில் ஒரேயொரு இந்திய படமாக இடம்பெற்றிருந்தது சூரரைப் போற்று. ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய சாதனையாக ஐ.எம்.டி.பி தளத்தில் டாப் 1000 படங்களில் ‘ஷாஷாங் ரிடெம்ஷன்’, ‘காட்ஃபாதர்’ படங்களை தொடர்ந்து 9.1 ரேட்டிங் பெற்ற படமாக இடம்பெற்றுள்ளது ‘சுரரைப் போற்று’.

அண்மையில் இந்த படம் புகழ்பெற்ற ‘ஷாங்காய் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டது.  ஏர் டெக்கன் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவரான கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான சிம்பிளி ஃபிளை என்கிற புத்தகத்தை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

நடிகர் சூர்யாவின் சொந்த நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கை தொடர்ந்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web