குவியும் வாழ்த்துக்கள்..! மீண்டும் தன் செயலால் நெகிழ வைத்த நடிகர் பாலா..!

 
1

கலக்க போவது யாரு புகழ் நடிகர் பாலா பல சமூக சேவைகளை செய்து வருகிறார். அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். 

இந்த நிலையில் பெண் ஒருவர் ஆட்டோ வாங்க முடியாமல் சிரமப்படுவதை கேள்விப்பட்ட பாலா உடனே ஒரு புதிய ஆட்டோ மூன்று லட்ச ரூபாய்க்கு வாங்கி அந்த பெண்ணையே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சர்ப்ரைஸ் ஆக ஆட்டோவை அவரிடம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணிடம் இந்த ஆட்டோவின் விலை மூன்று லட்சம், ஆனால் நான் பாதி காசு தான் கொடுத்தேன், மீதி காசு கொடுத்தது யார் என்பதை பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்க உடனே அந்த பெண் ’ஆமாம்’ என்று கூற அப்போது காரில் இருந்து நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் இறங்கி வருகிறார்.

இதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ராகவா லாரன்ஸை கட்டிப்பிடித்து அவரிடம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த வீடியோவை ராகவா லாரன்ஸ் ஆனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


 


 

From Around the web