குவியும் வாழ்த்துக்கள்..! கோலாகலமாக நடைபெற்ற பிரபல நடிகரின் மகள் நிச்சயதார்த்தம்..!
 

 
1

பிரபல நடிகர் ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டிகளிலும் பிரபலமானார்.அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார்.

இந்திரஜாவிற்கு, அவர்களின் உறவினர் கார்த்திக் என்பவருடன் ஏற்கனவே திருமணம் முடிவு செய்யப்பட்பட்டிருந்த நிலையில் நேற்று இவர்களின் நிச்சயதார்த்தம் இரு வீட்டாரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திரஜா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் கார்த்திக், மதுரையை சேர்ந்த தன்னார்வு நிறுவனமான தொடர்வோம் நிறுவனத்தின் நிறுவனராகும். இவர் தற்போது படங்களில் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்களும் ரோபோ சங்கர், பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் இந்திரஜாவின் சினிமா நண்பர்களும் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

From Around the web