குவியும் வாழ்த்துக்கள்..! கலைத்துறையில் இருந்து காவல்துறைக்கு செல்லும் பிக்பாஸ் நடிகை..!

 
1

பிக் பாஸ் மலையாளம் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை அப்சரா. இவர் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காவல்துறையில் அப்சராவின் தந்தை பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென விபத்தில் காலமானார். இந்த நிலையில் காவல்துறையில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருடைய வாரிசுக்கு வேலை கிடைக்கும் என்ற நிலையில் தற்போது அப்சராவுக்கு காவல்துறை பணி கிடைத்துள்ளது.



இந்த பணியை ஏற்றுக் கொள்ளுமாறு அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் அறிவுறுத்திய நிலையில் காவல்துறை பணியை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். சிறு வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தனக்கு விருப்பம் என்றும் தொலைக்காட்சி சீரியல், பிக் பாஸ் என சென்று விட்டதால் ராணுவத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டது என்றும் தற்போது காவல்துறை பணியில் கிடைத்துள்ளதை அடுத்து அந்த துறையில் நான் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்து அந்த துறையில் சாதிப்பேன் என்றும் அப்சரா தெரிவித்துள்ளார்.

வேலையில் சேர்வதற்கான அரசாணை தனக்கு கிடைத்து விட்டதாகவும் விரைவில் காவல்துறை பணியில் சேர இருப்பதாகவும் அப்சரா கூறியுள்ளார். இதனை அடுத்து கலைத்துறையில் இருந்து காவல்துறை பணிக்கு செல்ல இருக்கும் அப்சராவுக்கு தொலைக்காட்சி நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web