குவியும் வாழ்த்துக்கள்..!  பிரபல சீரியல் நடிகைக்கு திடீரென நடந்த ரகசிய திருமணம்!

 
1

சுந்தரி சீரியலில் ஒரு வருடத்துக்கும் மேலாக கர்ப்பமாக இருப்பது போல் நடித்து ரசிகர்களை வியக்க வைத்திருந்தார் ஸ்ரீ கோபிகா. அதே நேரத்தில் அதிகமான மீம்ஸ்கள் வலம் வந்தது. கதாநாயகி சுந்தரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதேபோல ஸ்ரீ கோபிகாவுக்கு அதிக முக்கியத்துவம் காணப்பட்டது.

சுந்தரி முதலாம் பாகத்தின் இறுதியில் இவர் இறப்பது போல காணப்பட்டது. ஆனால் அவர் உயிரோடு இருப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் உயிரோடு இருப்பது போன்ற காட்சிகள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னொரு பக்கம் கோபிகா சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய  நண்பனை எங்கேஜ்மென்ட் செய்திருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதற்கு பின்பு அந்த புகைப்படங்களை டெலிட் செய்தார். ஆனாலும் அது முடிந்து போன வாழ்க்கை அதை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார் தற்போது அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web