குவியும் வாழ்த்துக்கள்..! அப்பாவாக போகும் விஜே அஸ்வத்!

 
1

பாரதி கண்ணம்மா எனும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பியது. இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்பாக சென்றது. இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாக நடித்தவர் கண்மணி மனோகரன்.இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக நடித்தாலும் பின்னர் இவருடைய அஞ்சலி எனும் ரோல் பாசிட்டிவ்வாக மாறும். இந்த சீரியலால் தினமும் மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர். இன்னும் சொல்ல போனால், திட்டு வாங்கிக் கொண்டே இருந்தார்.

பின்னர் திருந்தி கண்ணம்மாவுக்கு உதவும்போதுதான் இவரை மக்கள் பாராட்டினர். பொதுவாக சீரியலில் யார் திட்டு வாங்குகிறார்களோ அவர்கள் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களது கேரக்டர் பேசப்படுகிறது என்பதாகும்.எனினும் இந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலேயே விலகிவிட்டார். பின்னர் ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் அந்த சீரியலும் மெகா சீரியல் போல் ஓடாமல் சீக்கிரமாகவே முடிந்துவிட்டது.

இதையடுத்து அவர் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்தார். பிறகு மகாநதி சீரியலில் நடித்துவிட்டு அதிலிருந்தும் விலகினார். இவர் சன் டிவி ஆங்கர் அஷ்வத்தை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர் சன் டிவியில் வணக்கம் தமிழா எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.அஷ்வத், இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் சீரியலிலும் நிலா நிலா ஓடி வா எனும் சீரியலிலும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு கண்மணி கணவர் அஷ்வத்துக்கு காரை பரிசாக கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலானது. இவர்கள் இருவரும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறைக்காக இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றனர். அப்போது விமானத்தில் இருந்து மார்பளவு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சிங்கப்பூரில் கண்மணி தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் அஷ்வத்- கண்மணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகைகள் நக்ஷத்திரா நாகேஷ், ஃபரீனா, சைத்ரா ரெட்டி, ஸ்ருதி சண்முகப்பிரியா, ஜோவிதா லிவிங்ஸ்டன், மோனிஷா பிளஸ்ஸி, ஹரிபிரியா, கேபிரில்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

From Around the web