குவியும் வாழ்த்துக்கள்...இன்று பிரேம்ஜி - இந்து ஜோடிக்கு கல்யாணம்..! 

 
1

நீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் இருந்த பிரேம்ஜி ஒரு வழியாக திருமண அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட நிலையில் அவர் இந்து என்ற பெண்ணை இன்று ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்ய போகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது தம்பியின் வருங்கால மனைவி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்றும், அவர் மீடியாவில் வேலை பார்க்கவில்லை என்றும் திருமண புகைப்படங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் இது தனிப்பட்ட முறையில் நடைபெறும் திருமணம் என்பதால் திருமணத்திற்கு யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரேம்ஜி திருமணம் செய்ய போகும் இந்து, வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்கிறார்கள் என்றும் இந்து தான் முதலில் காதலை ப்ரொபோஸ் செய்ததாகவும் சில நாட்களுக்கு காதலித்து, ஒருவருக்கு ஒருவர் மனம் பிடித்த பின்னர் தான் இரு தரப்பு வீட்டில் சொல்லி தற்போது திருமண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 40 வயதை கடந்த பிரேம்ஜிக்கு இன்றைய தினம் திருத்தணி கோவிலில் எளிமையாக திருமணம் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தற்போது நடிகர் பிரேம்ஜியின் எங்கேஜ்மென்ட் போட்டோ வெளியாகி வைரலாகி உள்ளன. இதில் மணமகனாக காணப்படும் பிரேம்ஜி சிரித்த முகத்துடன் படு ஜோராக காணப்படுகின்றார்.

 

 

From Around the web