பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஒப்பந்தமான பாலிவுட் நடிகை..!

 
வாணி கபூர்

அடுத்த மாதம் துவங்கப்படவுள்ள ‘சலார்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ள பிரசாந்த் நீல், அடுத்து இயக்கிவரும் படம் ‘சலார்’. இதற்கான ஷூட்டிங் பணிகள் முன்னதாக நடைபெற்று வந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது ஊரடங்கி விதிகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதுமுள்ள பல்வேறு திரைத்துறைகள் மீண்டும் ஷூட்டிங் செல்ல தயாராகி வருகின்றன.

அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’ படத்துக்கான ஷூட்டிங் அடுத்த மாதம் முதல் துவங்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு கதாநாயகியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்த வாணி கபூர், சலார் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். அவர் தொடர்புடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு மாதம் முதல் துவங்கப்படவுள்ளது.
 

From Around the web