சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

 
1

2011-ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து முன்னனி நடிகையானார்.

காக்கா முட்டை படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ‘கனா’ படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

farhana

தற்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம் ‘ஃபர்ஹானா’. இந்தப் படத்தில் தன்னுடைய, குழந்தைகளுக்காக மத கட்டுப்பாடுகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளனர்.  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

அதில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா அப்துல் ரஹீம் புகார் ஒன்றை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், “ஃபர்ஹானா படம் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் பண்ணும் வகையிலோ எடுத்த படம் அல்ல. இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே ஃபர்கானாவை எடுத்துள்ளேன்” என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தப் படத்தில் ஃபர்ஹானாவுக்கு 3 குழந்தைகள். கணவராக ஜித்தன் ரமேஷ் பண்ணிருக்காரு. அவங்களோட கூட வொர்க் பண்ற கேரக்டர்ல ஐஸ்வர்யா தத்தா, அனு மோல் நடித்திருக்கிறார். இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் கதை. சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும் திரில்லராக இந்தப் படம் இருக்கும்.

இந்தப் படத்தில் சர்ச்சைக்குரியவகையில் எதுவும் இல்லை. படம் பார்க்காம இப்படி பேசுறாங்க. படம் பார்த்தால் தான் புரியும். டீசரை வைத்து மட்டும் முடிவு பண்ணக்கூடாது” என்று பேசினார்.

From Around the web