சர்ச்சை மிகுந்த கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்..!

 
சன்னி லியோன் மற்றும் ஸ்ரீசாந்த்

பாலிவுட் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த நடிகை சன்னி லியோன், சர்ச்சை மிகுந்த கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

சூதாட்ட புகாரை அடுத்து கிரிக்கெட்டில் இருந்து வீரர் ஸ்ரீசாந்த் வெளியேறும் நிலை ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார். இதுவரை அவர் 2 இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மீண்டும் சினிமாவில் நடிக்கும் திட்டத்தில் அவர் உள்ளார்.

அதன்படி பாலிவுட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளார். பிரகாஷ் குட்டி என்பவர் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக சன்னிலியோன் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்தான் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஸ்ரீசாந்த் மற்றும் சன்னி லியோன் கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


 

From Around the web