விளம்பரத்தில் நடித்ததால் சர்ச்சையில் சிக்கிய சிம்பு பட நடிகை..!!
Jan 4, 2022, 14:47 IST
தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நிதி அகர்வால். தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். நிதி அகர்வால் தற்போது மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்றும் பேசியும் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில் “இந்தியாவின் மிகச்சிறந்த பிராந்தியான மார்பியஸ் ஒரு மாஸ்டர் பீஸ். தற்போது ஒரு அழகான கோப்பையுடன் வருகிறது, இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு சிப்பையும் சிறந்த முறையில் சுவைக்கலாம்.” என குறிப்பிட்டுள்ளார்.
 - cini express.jpg)