சமந்தாவின் ‘தி ஃபேமிலி மேன்’ சீரியலுக்கு எதிராக வெடித்த சர்ச்சை..!

 
தி ஃபேமிலி மேன் சிரீஸ்

இந்தியில் தயாராகியுள்ள தி ஃபேமிலி மேன் சீரியலின் இரண்டாம் பாகத்தால் புதிய சர்ச்சையை கிளம்பியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வலை தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இதே இரண்டாவது பாகத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உருவானது. தென்னிந்தியாவிலும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பை இருப்பதை உணர்ந்து கொண்ட நிகழ்ச்சிக் குழு, நடிகை சமந்தாவுக்கு சீசன் 2-வில் முக்கிய கதாபாத்திரம் வழங்கி ஒப்பந்தம் செய்தது.

கோவிட்-19 காலகட்டத்தில் இந்த சீரியல் முடிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் இதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது வரும் ஜூன் மாதத்தில் ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 சீரியல் வெளியாகவுள்ளது. முன்னதாக இன்று சீரியலுக்கான டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. முந்தைய சீசனில் காஷ்மீர் கதைக்களமாக இருந்தது. இம்முறை சென்னையை கதைகளமாக கொண்டு சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. சீரியலின் டிரெய்லரின் காட்டப்படும் சில காட்சிகள் தமிழர்களையும், எல்.டி.டி.இ குழுவையும் மையமாக விமர்சிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன.

மேலும் இந்த தொடரில் சமந்தா ஒரு போராளியாக நடித்துள்ளார். அவருக்கும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது போன்ற வசனங்கள் டிரெய்லரில் வருகின்றன. அதனால் இந்த தொடரை ஒளிப்பரப்பு செய்வதை அமேசான் நிறுவனம் நிறுத்த வேண்டும் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 

From Around the web