சிவகார்த்திகேயன் தந்தை மரணம் குறித்து சர்ச்சை: ஹெச். ராஜா மீது புகார்..!

 
தந்தை புகைப்படத்துக்கு முன்னால் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணத்தை வைத்து அவருடைய ரசிகர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்த ஹெச். ராஜா முயற்சிப்பதாக அவர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பாஜக-வை சேர்ந்த ஹெச். ராஜா, நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணத்திற்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தான் காரணம் என்று தெரிவித்தார்.

இது அரசியல் களத்திலும் திரையுலகிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே மனிதநேய மக்கள் கட்சி டிஜிபி அலுவலகத்தில் ஹெச். ராஜா மீது அவதூறு புகார் அளித்துள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை இயற்கையாக மரணம் அடைந்ததை கொலை என்று ஹெச். ராஜா பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த புகாரில் அவதூறான பேசி மன்னிப்பு கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஹெச். ராஜா. ஆனால் அதை நிறுத்தவில்லை. அதன் காரணமாக எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா மீது பொய் குறச்சாட்டுக்களை முன்வைத்து வரும் ஹெச். ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

From Around the web