குக் வித் கோமாளி அஸ்வின் தான் ஹீரோ.. எப்படி விட்டுக் கொடுத்தார் தளபதி விஜய் !!

 
குக் வித் கோமாளி அஸ்வின் தான் ஹீரோ.. எப்படி விட்டுக் கொடுத்தார் தளபதி விஜய் !!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகி கலக்க வருகிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஸ்வின் தான் ஹீரோ. குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் கவர்ந்த புகழ் தான் காமெடி ரோல் செய்கிறார். அந்த படத்தை புதுமுகம் ஹரிஹரன் இயக்குகிறார். 

பெரிய திரைக்கு வந்துவிட்டால் நிச்சயம் நல்ல மேனேஜர் வேண்டும். அப்பொழுது தான் கெரியரை பிக்கப் செய்ய வைக்க முடியும் என்பது அனைவரும் தெரிந்தது தான். இந்நிலையில் விஜய்யின் மேனேஜர் இனி அஸ்வினுக்கும் மேனேஜராக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வினுக்காக பெரிய பட தயாரிப்பு நிறுவனங்களுடன் அந்த மேனேஜர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கூட ஒரு படத்தில் அஸ்வினை நடிக்க வைக்க முயற்சி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் மேனேஜர் பலருக்கும் தெரிந்த நபர் என்பதால் அஸ்வினின் கெரியர் விரைவிலேயே உச்சத்திற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அஸ்வின் எப்படி விஜய் மேனேஜரை பிடித்தார், இதற்கு விஜய் எப்படி சம்மதித்தார் என்ற கேளவி திரையுலக இளம் நடிகர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

From Around the web