சதீஷுக்கு ஜோடியாக நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்..!

 
சதீஷுக்கு ஜோடியாக நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்..!

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக மாறிய வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி ஆகியோருடைய வரிசையில் இளம் காமெடி நடிகர் சதீஷும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கிஷோர் ராஜ்குமார் என்கிற அறிமுக இயக்குநர் இந்த படத்தை  இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

இதில் படக்குழுவுடன் நடிகர் சவிகார்த்திகேயன் பங்கேற்று சதீஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை கூறினார். இந்த படத்தின் மூலம் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா லக்ஷ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

From Around the web