தளபதி 65 படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா..?

 
தளபதி 65 படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா..?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வரும் ‘தளபதி 65’ படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்ஷ்மி நடிக்கவுள்ள செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அவரே பதிலளித்துள்ளார்.

தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

தற்போது இந்த சீசன் நிறைவடைந்துவிட்ட நிலையில், எப்போது இதனுடைய மூன்றாவது சீசன் தொடங்கும் என ரசிகர்கள் இப்போதே கேட்க துவங்கிவிட்டனர். அதே சமயத்தில் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

அஸ்வின் குமார் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல விஜய் சேதுபதி நடிக்கும் படம், சிம்புவுடன் மாநாடு என மொத்தம் 7 படங்களில் நடிக்க புகழ் கமிட்டாகியுள்ளார்.

பாடகி ஷிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபோன்று இன்னும் பல போட்டியாளர்கள் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் நடிகர் சதீஷ் நடிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விஜய் 65 படத்திலும் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியானது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், தன்னை யாரும் தளபதி 65 படத்தில் நடிக்க அணுகவில்லை என்றும், தற்போதைக்கு காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் பவித்ரா லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
 

From Around the web