குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிச் சுற்றில் ஏ.ஆர். ரஹ்மான்..!

 
குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிச் சுற்றில் ஏ.ஆர். ரஹ்மான்..!

தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2-வின் இறுதிச்சுற்றில் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளது போட்டியாளர்களுக்கு சர்பரைஸாக அமைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றை எதிர்நோக்கி பார்வையாளர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவி போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் பல்வேறு சர்பரைஸ்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே இந்த ஷோவின் இறுதிச்சுற்றில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிம்பு பங்கேற்றுள்ளார். அதேபோல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் குக் வித் கோமாளி 2 ஃபைனல்ஸில் பங்கேற்றுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.


இந்நிகழ்ச்சியில் ஃபைனல்ஸில் இட்மபெற்றுள்ள கனி திருவிடம், இறுதிச்சுற்றும் காரா கொழம்பு தானா என்று கேட்டுள்ளார். அதுதொடர்பான உரையாடலும் ப்ரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ரஹ்மான் தன்னிடம் பேசிவிட்டதை கனி அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக பார்க்கிறார்.
 
சிம்பு, ஏ.ஆர். ரஹ்மானை தவிர பிரபல பாடகி தீயும் குக் வித் கோமாளி சீசன் 2 ஃபைனஸில் பங்கேற்றுள்ளார். போட்டியாளர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வெளியாகியுள்ளது. இதன்மூலம் குக் வித் கோமாளி 2 இறுதிச்சுற்று பார்வையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web