குக் வித் கோமாளி சீசன் 3- இப்போதைக்கு இல்லை..!

 
குக் வித் கோமாளி சீசன் 3

விஜய் தொலைக்காட்சியின் சிக்னேச்சர் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கப்படுவதற்கான அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன.

குக் வித் கோமாளி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த சீசனின் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்படார். மேலும் கோமாளிகளாக களமிறங்கிய புகழ், ஷிவானி, பாலா, சரத் போன்றோர் மேலும் பிரபலமானார்கள்.

இந்த வரிசையில் இரண்டாவதாக ஒளிப்பரப்பான சீசன், முதல் சீசனை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. புகழ், ஷிவானி, பாலா, சரத் போன்ற பிரபல கோமாளிகள் இந்நிகழ்ச்சியிலும் தொடர்ந்தனர். இதனால் முதல் சீசனை விடவும் இராண்டாவது சீசனில் பல குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் அமைந்தன.

தற்போது இதனுடைய மூன்றாவது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வரும் அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸ் சீசன் 5 துவங்குகிறது. இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web