மீண்டும் தொடங்கவுள்ளதாக ‘குக் வித் கோமாளி’சீசன் 3  - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!. 

 
1

விஜய் டிவியின் குத் வித் கோமாளி நிகழ்ச்சி உலக அளவில் மிகவும் பிரபலம். இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஷிவாங்கி, புகழ், பாலா என அந்த நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகளின் சேட்டைக்காகவே பலரும் விரும்பி பார்க்கும் ஷோவாக குக் வித் கோமாளியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகை வனிதா வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனில் காரக்குழம்பு கனி வின்னராகவும், அஸ்வின், ஷகிலா ஆகிய இருவரும் ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழில் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வேற்று மொழிகளில் இந்நிகழ்ச்சியை தயாரிக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில் முதல் முயற்சியாக கன்னடத்தில்  ‘குக் வித் கிறுக்கு’ என்று பெயர் சூட்டினர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில், இது குக்கு வித் கோமாளி.. முடிஞ்சா சிரிக்காம சமாளி.. விரைவில் உங்கள் விஜய் டிவியில் என்று கேப்ஷனாக போடப்பட்டுள்ளது. 

 

From Around the web