விரைவில் துவங்கப்படும் குக் வித் கோமாளி சீசன் 3- அப்போ பிக்பாஸ்..?

 
குக் வித் கோமாளி சீசன் 3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் டி.ஆர்.பி-யை சரிகட்ட குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனை களமிறக்க நிகழ்ச்சிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டப்படி ஜூன் இறுதிவாரத்தில் துவங்கப்பட வேண்டிய பிக்பாஸ் சீசன் 5-யின் தயாரிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் டி.ஆர்.பி ரேட்டிங் இழப்பீட்டை குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பெறுவதற்கு விஜய் டிவி முயன்று வருகிறது.

தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் பிரபலமான இந்நிகழ்ச்சியின் 2 சீசன்களும் வரவேற்பை குவித்தன. அதில் கோமாளிகளாக நடித்தவர்களும், குக்குகளாக வந்து கலக்கியவர்களும் தற்போது தமிழக ரசிகர்கள் கொண்டாடும் பிரபலங்களாக மாறிவிட்டனர்.

குக் வித் கோமாளி மூலம் கவனமீர்த்த புகழ், ஷிவாங்கி இருவரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல இரண்டாவது சீசனில் குக்குகளாக வந்து கலக்கிய தர்ஷா மற்றும் பவித்ரா லக்ஷ்மி ஆளுக்கொரு படத்தில் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

அதேபோல கடந்த சீசனில் பலருடைய மனங்களை கொள்ளை கொண்ட அஸ்வின் லக்ஷ்மிகாந்தன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்திலும் புகழ் காமெடியாக நடிக்க கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் பிரபலமான பலரும், பிரபலமாகி பிறகு நட்சத்திர அந்தஸ்த்தை இழந்த பலரும் குக் வித் கோமாளியை குறிவைத்துள்ளனர்.

அதனால் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கப்படவுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. 

அதனால் விஜய் டிவியின் நிகழ்ச்சிக்குழுவினர் குக் வித் கோமாளி சீசன் 3 தயாரிப்பு பணிகளை துவங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதில் புகழ் மற்றும் ஷிவாங்கி இருவரும் ஒப்பந்தம் செய்யப்படுவார்களா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

From Around the web