குக் வித் கோமாளி அப்டேட்- புகழ், சிவாங்கி ரசிகர்களுக்கு வெளியான சோக செய்தி..!

 
புகழ் மற்றும் ஷிவாங்கி

புதியதாக தொடங்கப்படவுள்ள குக் வித் கோமாளி சீசன் 3 ரியாலிட்டி ஷோவில் புகழ் மற்றும் சிவாங்கி இருவரும் இடம்பெறமாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவுக்கு நல்ல வரவேற்புள்ளது . அந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வரும் புகழ் மற்றும் சிவாங்கிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உண்டு.  முன்னதாக ஒளிப்பரப்பான இரண்டு சீசன்களும் மிகப்பெரிய ஹிட்டடித்துவிட்டன. இதனால் மூன்றாவது சீசனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு சோகமாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் இரண்டு சீசன்களில் தோன்றி புகழின் உச்சிக்கு சென்ற புகழ் மற்றும் ஷிவாங்கி இருவரும் புதிய குக் வித் கோமாளி சீசனில் இடம்பெறமாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து படங்களில் அவர்கள் கமிட்டாகி வருவதால், சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைகாட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.

புகழ் தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படம், அஸ்வின் லக்ஷ்மிகாந்தனுடன் ஒரு படம் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார். அதேபோல, ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதை தொடர்ந்து ‘காசேதான் கடவுளடா’ படத்தில் மிர்ச்சி சிவாவுடன் நடிக்கிறார். தொடர்ந்து அவருக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டுள்ளன. அதனால் அவர்கள் இருவரும் குக் வித் கோமாளி புதிய சீசனில் இடம்பெறுவது சந்தேகமே என்று தெரியவந்துள்ளது.

From Around the web