பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்! அது யார் தெரியுமா ?

 
1

இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 2 வீடுகள் இடம்பெற்றுள்ளதாக சமீபத்திய ப்ரமோவில் கமல்ஹாசன் அறிவித்தார். எதற்காக 2 வீடு, இரண்டாவது வீட்டில் யார் இருக்க போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் துவங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூட ஒரு வீடுதான் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன், ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், மாடல் ரவி குமார், மாடல் நிலா, நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, அகில், சோனியா அகர்வால் வி.ஜே. பார்வதி ஆகிய 18 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிவரும் குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கமலின் பெரிய சைஸ் போட்டோ முன் நின்று விரைவில் பிக்பாஸ் சீசன் 7 என பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதை உறுதி செய்திருப்பதாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From Around the web