கார் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்..!

 
1

குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக வந்தவர் சக்தி. அவர் தற்போது அந்த ஷோவில் வருவது குறைந்துவிட்டாலும் தற்போது சொந்தமாக youtube சேனல் வைத்து நடத்தி வருகிறார்.அதன் மூலம் பல ரசிகர்களை கட்டி போட்டுள்ளார் இவர்…

சக்திக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம் சக்தி புது கார் வாங்கி இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் தற்போது அவர் சென்னை சென்ட்ரல் அருகில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி இருக்கிறார்.

சக்தி அவரது காரை ஓட்டிசென்ற போது ஒரு பேருந்து காரை உரசியபடி வந்து இடித்து இருக்கிறது.அதில் சக்தியின் தலையில் அடிபட்டு இருக்கிறது இருப்பினும் ஹாஸ்பிடல் செல்லும் அளவுக்கு பெரிய காயம் இல்லை என அவர் போட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளார்.

இருப்பினும் சக்தியின் புது கார் விபத்தில் பெரிய சேதம் ஆகி இருக்கிறது.அதனை அவரே வீடியோவில் காட்டி இருக்கிறார்…மனஉளைச்சலில் இருக்கிறார் காரின் கண்ணாடி உடைந்து பெயிண்ட் காரை விட்டு போயி மோசமான நிலையில் இருப்பதாய் காண்பித்தார்..

From Around the web