’குக் வித் கோமாளி’ சீசன் 4: ஷிவாங்கி, விஷால், விசித்திராவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..??

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்களின் சம்பளம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
 
cook with comali

தொலைக்காட்சி பார்வையாளர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் முதன்மையானது ‘குக் வித் கோமாளி’. மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

முந்தைய சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி, நடப்பு சீசனில் குக்காக மாறியுள்ளார். இதை தவிர, புதியதாக மோனிஷா, ரவீனா தாஹா மற்றும் சில்மிஷன் சிவா உள்ளிட்டோர் புதிய கோமாளியாக நிகழ்ச்சிக்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளின் தினசரி சம்பளம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த வாரம் ராஜ் ஐயப்பன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இவர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஒரு எபிசோட்டில் வருவதற்கு மட்டும் ரூ. 26 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பிரான்ஸ் அழகி ஆண்ட்ரியா ஒரு எபிசோட்டுக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம் பெறுகிறாராம்.

மேலும் ஒரு எபிசோட்டில் பங்கேற்பதற்காக பாக்கியலட்சுமி சீரியல் புகழ் வி.ஜே. விஷாலுக்கு ரூ. 25 ஆயிரமும், சினிமா நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு ரூ. 35 ஆயிரமும், நடிகை விச்சித்திராவுக்கு ரூ. 30 ஆயிரமும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கக் கூடிய நபர் மைம் கோபி தான் என்று கூறப்படுகிறது. அவர் ஒருவருக்கு ஒரு எபிசோட்டில் தோன்றுவதற்கு ரூ. 50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. நடப்பு சீசனில் மிகவும் கம்மியாக சம்பளம் வாங்கும் குக், அது ஷிவாங்கி தான். அவருக்கு எபிசோட்டுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் தரப்படுகிறது.
 

From Around the web