டிடிஎப் வாசன் இடத்தில் கூல் சுரேஷ் - இயக்குனர் செல்அம் கொடுத்த ட்விஸ்ட்..!
டிடிஎப் வாசன் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மஞ்சள் வீரன்’. இந்தப் படத்தைச் செல்அம் இயக்க இருந்தார். இவர் ஏற்கனவே ‘திருவிக பூங்கா’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து படத்தின் கதாநாயகனும் , பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார். படத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகச் செல்அம் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து டிடிஎப் வாசன், என்னைப் படத்திலிருந்து நீக்கியதே எனக்குத் தெரியாது, மேலும் இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்தப் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது. நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது.