சந்தானத்துக்காக காலில் விழுந்த கூல் சுரேஷ்!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது டிடி நெக்ஸ்ட் லெவல். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன் மற்றும் யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாம் வெளியாகி வரவேற்பினை பெற்ற நிலையில், கடந்த சில நாட்களாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து வெளியான 'கோவிந்தா கோவிந்தா கிஸ்ஸா 47' பாடலுக்கு எதிராக பாஜக நிர்வாகி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் 'டிடி நெகஸ்ட் லெவல்' படத்துக்கு தடை விதிக்கக்கோரி கோரிக்கை வைத்தனர்.
இதனிடையில் தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டும் என்றும், 'கோவிந்தா கோவிந்தா' பாடலில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார் சந்தானம். இந்நிலையில் சினிமா விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் கூல் சுரேஷ் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அதில், என்னுடைய நண்பர் சந்தானம் கடவுள் நம்பிக்கை உடையவர். மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு எதிராக பிரச்சனை செய்ய வேண்டாம்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் நடிகர் தான். சினிமா கஷ்டம் பற்றி அவருக்கும் தெரியும். இந்தப்படத்தை பார்த்துவிட்டு அவரது தரப்பு பேச வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நல்லபடியாக இந்தப்படம் ரிலீசாக வேண்டும் என கண்கலங்க பேசியுள்ளார் கூல் சுரேஷ்.
மேலும், தெலுங்கானா துணை முதல் முதல்வர் பவன் கல்யாண் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என் மேடையிலே விழுந்து, இங்கு நீங்கள் இருப்பதாக நினைத்து காலில் விழுகிறேன் என மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார் கூல் சுரேஷ். 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழு பாடலை நீக்கியுள்ளது.
"கோவிந்தா கோவிந்தா" என்கிற வரிகள் இடம்பெற்ற கிஸ்ஸா பாடல் ஏழுமலையான் பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கி மீண்டும் மறு தணிக்கையை படக்குழு பெற்றுள்ளது. நாளை வெளியாகும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் அந்த பாடல் இடம்பெறாது என படக்குழு உறுதியளித்துள்ளது.