நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா உறுதி- ட்விட்டரில் அறிவித்தார்..!

 
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா உறுதி- ட்விட்டரில் அறிவித்தார்..!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தன்னுடன் ஒரு வாரமாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுன் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு நகரங்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் பலர் அவதியுற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


தெலுங்கு திரையுலகில் முன்னணியாக நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அந்த பதிவில் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலே இருங்கள், வாய்ப்பு கிடைக்கும் போது தடுப்பூசி போட்டுக்கொள்ள தவற வேண்டாம். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன் என அல்லு அர்ஜுன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web